Wednesday, March 21, 2012

மராட்டியன், கன்னடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வோம் « வே.மதிமாறன்

தகவல்

24 பதில்கள்

6 01 2009
Nithil
I am proud to say that i am one of the readers of your articles about Dr. Ambedkar. I am ready to buy and wear (wholeheartedly) the Ambedkar T-Shirt (though i do not have the habit of wearing T-Shirts that has prints of leaders’ photos). I sincerely appreciate your good work. Nithil
6 01 2009
யாரோ
///டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர். /// I expected this… :-( …. But what I didn’t expect is you would announce this… Good that you announced this ‘கேடுகேட்ட நிலை’. இதையெல்லாம் மீறித்தான் நாம் போராட வேண்டியுள்ளது….
6 01 2009
யாரோ
//அருந்ததயிர் சமூகம் உட்பட எல்லா தாழ்த்தப்பட்ட மக்களின் துயரங்களையும் புரிந்திருந்தார். ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத்தான் டாக்டர் அம்பேத்கரின் குரல் இருந்தது. அதனால்தான் அவரை இந்தியாவில் இருக்கிற அனைத்து தலித் மக்களும் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்தச் சிறப்பு தலித் தலைவர்களிலேயே டாக்டர் அம்பேத்கரிடம் மட்டுமே இருந்து. காரணம் ஜாதி என்பது பொய். ‘பிறப்பால் ஜாதி பார்ப்பதும், தன்னை ஜாதியாக உணர்வதும் 2000 ஆண்டுகளாக பார்ப்பனியம் இந்த சமூகத்தில் ஏற்படுத்திய பழக்கம்’ என்கிற கண்ணோட்டம் அவரிடம் உறுதியாக இருந்தது. அதனால்தான் ஜாதிகளுக்கு எதிரான புத்தரை தனது முன்னோடியாக கொண்டார்.// இங்கே சில கேள்விகள் எழுகின்றன. சாதி ரீதியாக உணர்வது வேண்டாம் என்று கூறீயவர் அம்பேத்கர. அப்படிப்பட்ட தலித் விடுதலை போராட்டம் என்பது பார்ப்பனியத்தின் விதிமுறைக்கு உட்பட்டு போராடும் மோசடி என்பதுதான் எனது கருத்தும். ஆனால் இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கு போராடுபவர்கள் தலித் என்ற அடையாளத்துடன் மட்டும்தான் ஒன்று சேர முடியும் என்று அம்பேத்கரை உரிமை கொண்டாடுவதை நாம் எப்படி பார்ப்பது? இது பார்ப்பனியத்தின் வரையறையிலிருந்து கொண்டே நமது விடுதலையே வென்றெடுக்க போராடுவது ஆகாதா? அப்புறம் அம்பேத்கரின் அஹிம்சா வழி போராட்டம் குறித்து, அதாவது பார்ப்பனிய அதிகாரத்துவத்தால் கெட்டி தட்டி போன இந்த அரசை தூக்கியேறிவதில் அம்பேத்கர் உடன்படாமல் இருந்த நிலை குறித்து உங்களது விமர்சனம் என்ன? குறீப்பாக வன்முறயை அவர் எதிர்த்து நின்றது குறித்து விமரசனமும், அம்பேத்கர் கடைசி காலங்களீல் தனது அரசியல் திசை வழி குறித்து வருத்ததுடன் குறிப்பிட்டவை குறித்த விமர்சனத்தையும் உங்களிட எதிர்பார்க்கிறேன். அம்பேத்கர் நமது தலைவர் என்ற போதும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எனக்கு உண்டு. அதனை எழுப்ப இது சரியான தளமா என்ற சந்தேகம் இருந்தபடியால்தான் இந்த தொடர் கட்டுரையில் இதனை பேசவில்லை. ஆனால் அம்பேத்கரை புறக்கணிக்கும் அவலம் வெளிப்படையாக தெரிந்த பிற்பாடு இந்த விசயங்கள் பேசப்பட்டே தீர வேண்டும் என்று உணர்கிறேன். இது மட்டும்தான், இப்படிப்பட்ட விவாதம்தான் அம்பேத்கரின் வீரியமான அரசியலை நாம் மீட்டெடுத்து நமது விடுதலை போராட்டத்தை கூர்மைபடுத்த உதவும். யாரோ
6 01 2009
RV
Mathimaran, I would have thought that writing about Ambedkar would have increased your hit count. It is depressing to hear the opposite. I have several disagreements with you. Particularly, for a person who professes to have no caste feelings, you tend to blame brahmins a lot. Even in this post, you write: // ந்தை பெரியாரைப் பற்றி எழுதும்போது, பார்ப்பனர்கள், மதவாதிகள் போன்றவர்கள் நம்மீது கடுமையான கோபம் கொள்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரை பற்றி எழுதும்போது பார்ப்பனர்கள், // In other words, if a person born in brahmin caste disagrees with you, his/her motives are suspect in your eyes. This is just reverse casteism. I also don’t beleive in Ambedkar T-shirts. I put it on par with Kalaignar’s attempts to erect statues, mani mandapams, release stamps etc. Having said all that, you are the only person that I know of who has tried to bring Ambedkar out of the Dalit identity. Almost everything I know about Ambedkar’s writings come from your posts. I always thought that if a person is capable of leading an effort to draft a constitution, identifying him as only a dalit is to focus on only aspect of his genius. Unfortunately, every speech/article on Ambedkar focuses only on his dalit identity. My congratulations on your attempt to bring his writings to everyone. P.S. Why do you waste time answering comments like since Ambedkar married a brahmin, he is not really against casteism?
6 01 2009
விஜய்
ஆனந்த விகடனின் யோக்கியதை ஆனந்த விகடன் இதழ் அம்பேத்கர் குறித்து நீங்கள் முதல் அத்தியாயத்தில் எழுதிய பகுதியை அப்படியே எடுத்து ஒரு வாசகரின் பெயரில் பிரசரித்துள்ளது. அதில் உங்கள் பெயரையோ உங்கள் வலைப்பூ முகவரியோ அதில் படித்தது என்றோ குறிப்பிட வில்லை. இது தான் ஆனந்தவிகடனின் யோக்கிதையா?. இது மட்டுமல்லாமல் பல வலைப்பூ பக்கங்களின் அறிமுகம் செய்கிற விகடன் பக்கத்தில் உங்கள் வலைப்பூ இது வரை வந்ததில்லை. நீங்கள் விகடனை கடுமையாக விமர்சனம் செய்வதுதான் அதற்கு காரணமா?
6 01 2009
சதிஸ்
//தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. // ஆம் தோழர் நான் ஒரு மாததற்கு முன் கீற்று என்ற இனையதளத்தில் உங்கள் கேள்வி-பதில் வருகிறது என்று ஆசிரியர் பக்கத்தில் அறிமுகம் பார்த்தேன் பிறகு உங்கள் கேள்வி-பதிலும் வரவில்லை அந்த அறிவிப்பையையும் காணவில்லை. என்ன ஆயிற்று கீற்று முற்போக்கு தளத்திற்கு?. சதிஸ் சுவிஸ்
6 01 2009
செ.தமிழ்ச்செல்வன்
வணக்கம் தோழர், பொதுவாகவே நம் எழுத்தாளர்கள் பலர் ஒரு தொடரை எழுதும்போது அதை வாசகர்கள் குறைவாக படிக்கிறார்கள் என்றால் விரைவாக அந்த தொடரை முடிதுக்கொல்வர்கள்.ஆனால் நீங்கள் அதை பற்றிஎல்லாம் கவலைகொள்ளாது எழுதியது என்பது மிக அறிய நல்ல செயல். இப்படிக்கு, செ.தமிழ்ச்செல்வன்
7 01 2009
தமிழ் ஓவியா
//டாக்டர் அம்பேத்கர்-தந்தை பெரியார் இருவரிடமும் சுயஜாதி அபிப்பராயம் சுத்தமாகக் கிடையாது. அவர்கள் ஜாதியை துளியும் நம்பியதில்லை. அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீவிரமாக போராட முடிந்தது. அவர்களால் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் வெற்றியும் பெறமுடிந்தது. // சரியாக முடித்திருக்கிறீர்கள். சிறந்த தொடர். நூலாக வெளியிடவும். நன்றி.
7 01 2009
சதுக்கபூதம்
ஒடுக்க பட்ட மக்களுக்காக அம்பேத்கார் போராடிய அளவுக்கு யாரும் ஆதிக்க சக்தியை எதிர்த்து போராடியிருக்க முடியாது. ஆனால் அவர் மொழி ரீதியாக பிறறை ஆதிக்கம் செலுத்துவதை ஆதரித்தது தவறான செயல் http://www.tribuneindia.com/2003/20031220/windows/main4.htm
7 01 2009
பெரியாரிஸ்ட்
அய்யா ! தங்களின் “அம்பேத்கர் T.shirt” அணிவது தொடர்பான கட்டுரையின் ஒரு பகுதியை எனது http://muzhangu.wordpress.com ல் “அம்பேத்கர் என்றவுடன் அடி வயிறு எரியுதடா” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன்.நன்றி.
7 01 2009
kalagam
டாக்டர் அம்பேத்கர் பற்றியான தொடர் எழுதுவதற்கு முன்பு எனது வலைப்பதிவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு 700, 800, 900 என்று இருந்தது. அம்பேத்கர் தொடரின் முதல் அத்தியாயம் முடியும் முன்பே 400, 300, 200 என்று சரிய ஆரம்பித்தது. பதிவின் இணைப்பை தருகிற ஒரு சில தளங்கள் அம்பேத்கர் பற்றியான நமது கட்டுரையின் இணைப்பை புறக்கணித்தன. தொடருக்கு முன்பு, என்னை சிறப்புப் பகுதி எழுத கேட்டுக் கொண்ட பிரபலமான இரண்டு இணையதளங்கள், அம்பேத்கர் தொடர் துவங்கியபிறகு, என்னோடான உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் என்னிடம் எழுத கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றி எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதேபோல் தொடருக்கு முன்பு என் எழுத்துக்ளையும் என்னையும் சிலாகித்து, என்னோடு பேசுவதே பெருமைக்குரியது என்று புல்லரித்த ‘முற்போக்காளர்கள்’ பலர் தொடருக்கு பின்பு தொலைந்து போயினர். ‘டாக்டர் அம்பேத்கரை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?’ என்று நாம் கேட்டோம். நம்மையும் சேர்த்து புறக்கணித்தனர்” வணக்கம், பார்ப்பனீயத்துக்கெதிரான போரில் நாம் இன்னமும் நிறையவே இழக்க வேண்டியிருக்கின்றது த்ன் மானத்திற்காக சுய மரியாதைக்காக தந்தை பெரியார் சந்தித்த இழப்புகள் ஏராளம்.ஆனால் அவை இழப்புகளாக எடுத்துக்கொள்ளவில்லை பெரியாரும் சரி மற்றும் புரட்சியாளர்கள் அதை பெருமையாகவே எண்ணினர்.தோழர் மதிமாறன் அவர்களே பெருமைகொள்ளுங்கள் நீங்கள் களத்தில் நிற்கிறீர்கள். தந்தை பெரியார் கடவுளின் சிலையை அடித்தாரே அந்த செருப்பு மீண்டும் தேவைப்படுகின்றது பார்ப்பனீயத்துக்கெதிராக அது பார்ப்பனீய களமாக மட்டுமிருந்தால் பார்ப்பனீயத்தை வீழ்த்த முடியாது வாருங்கள் வர்க்கபோரில் ஒன்றாய் களம் புகுவோம்.ஏனெனில் பார்ப்பனீயமும் மறுகாலனியும் பின்னிப்பிணைந்த பாம்புகள் கலகம்
7 01 2009
பாக்கியராசன் சேதுராமலிங்கம்
நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள்?… தலிதுகளுக்காகவா இல்லை தமிழினத்துகாகவா? உங்கள் எழுத்துகளை யார் படிக்க வேண்டுமோ, யாரின் குற்ற உணர்ச்சியை வெளி கொண்டுவது நீங்கள் அரவணைக்க வேண்டுமோ அவர்களை வசை பாடுங்கள்.. நன்றாக வந்து உங்கள் பக்கங்களை படிப்பார்கள்… முற்போக்காளர்களையும், பிற்படுத்தவர்களையும் நீங்கள் வசை பாடியவுடன் உங்கள் கொள்கைகள் வெற்றி பெற்றுவிடுமா? இல்லை தலித் மீதான அடக்குமுறை தான் நின்றுவிடுமா?.. யார் நண்பன், யார் எதிரி என்று அறிந்துகொள்ள தெரியாத மூடராய் இருக்கும் காரணத்தினால் தான் உங்களை புறக்கணிக்கின்றனர் என்பது என் கருத்து… உங்கள் எழுத்தை தீவிரமாய் படித்து, இந்த தொடர் எழுதிய பின் வெறுத்த, ஒரு பிற்படுத்தப்பட்ட முற்போக்குவாதி.. பாக்கியராசன் சேதுராமலிங்கம்
8 01 2009
ந.செந்தில்
//இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம்.// அற்புதமான ஒரு தொடர் முடிந்து விட்டது. வலை பகுதியின் பார்வையாளர்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதிகமானவர்கள் படித்து பயனுறாமல் போவதை விட, குறைவானவர்கள் படித்து பயனுருவதே மேல்.
10 01 2009
லிவிங் ஸ்மைல்
புறக்கணித்த தளங்களை பட்டியலிட்டால், அவற்றை புறக்கணிக்க எனக்கு ஏதுவாக இருக்கும். கண்டிப்பாக புத்தகமாக வரவேண்டிய தொடர். அதிகம் படித்திராத எனக்கு இது பல புது தகவல்களை தந்து உதவியது. பல ஈடுஇணையற்ற பணியாற்றிய அம்பேத்கருக்குள்ள இத்தகைய ஆதரவின்மையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
10 01 2009
Dr. V. Pandian
மதிமாறன் அவர்களே உங்களது கருத்துகள் எல்லாம் சரிதான். ஆனால், இதையும் மீறி ஜாதி என்கிற உங்களின் அழுகிய நாற்றத்தை மறைப்பதற்காக, ‘தமிழ்தேசியம்’ என்கிற வாசனை திரவியம் பூசிக் கொண்டு தந்தை பெரியாரை ‘கன்னடன்’ என்றும், தலைவர் அம்பேத்கரை ‘மராட்டியன்’ என்றும் சொல்வீர்களேயானால், நாங்களும் எங்களை ‘கன்னடன்’என்றும் ‘மராட்டியன்’ என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்வோம். என்ற உங்களின் நிறைவுப் பத்தியைப் படித்து அதிர்ந்து போனேன். ஆக, உங்களிடமும் அரசியல் உள்ளதென்பது தெளிவு. தமிழ்த்தேசியம் பேசுவது தவறா? பெரியார் தி.க தமிழ்தேசியத்திற்கெதிரானது என்பது எனக்குத் தெரியும். உங்களின் தனிப்பட்ட எண்ணமும் அது தானா? இது கொடுமையல்லவா? ஒரு சில தமிழ்தேசிய வாதிகள் பெரியாரை கன்னடரென்று வாதிக்கலாம். தமிழக எல்லைப் போராட்டங்களில் பெரியார் கவனம் செலுத்தவே இல்லை என்பது போன்ற சில ஞாயமான விமர்சனங்கள் உண்டுதான். ஆனால், பெரும்பாண்மை தமிழ்த்தேசிய வாதிகள் பெரியாரை நேசிப்பவர்கள் தாம். அவரிடம் நன்றி பாராட்டுபவர்கள் தாம். உங்களைப் புரக்கனித்தவர்களின் பெயர்களை நீங்கள் வெளியிடவில்லை. ஆனால், தமிழ்த்தேசிய வாதிகளை இப்படிக் கொச்சைப் படுத்தலாமா? கடைசியாக, நீங்களும் கன்னடரென்று (தெலுங்கரென்று) சொல்லிக் கொள்வீர்களா? இப்படி உங்களது கட்டுரையை முடிப்பது உங்களுக்கு அபத்தமாக தெரியவில்லையா? உங்களது கருத்துக்கு எதிராகவே நீங்களே பேசுவது போல் உங்களுக்கு தெரியவில்லையா? ஈ. வி.கெ.ஸ் இளங்கோவன் சொல்கிறார், ‘தமிழகத்தில் தமிழர் மட்டும் இல்லை அதனால், சென்னை உயர்நீதி ம்ன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆகக்கூடாது’ என்று. இவர் ஓட்டுக் கேட்க பயன்படுத்தும் மொழி தெலுங்கல்ல, தமிழ். ஆனால், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகக் கூடாதாம். எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்! பெரியாரின் சொந்தத்தில் இப்படி ஒரு அபத்தப்பிறவி! மதிமாறன் அவர்களே! நீங்களும் இப்படிப்பட்டவரா? இந்தியா தற்போது ஒரே நாடுதான். ஆந்திராவுக்கோ, கர்நாடகாவுக்கோ சென்று வாழலாமே! வந்தேறிகளால் தமிழன் பட்டதெல்லாம் போதுமய்யா! நீங்கள் பெரியாரைப்பற்றியும், அம்பேத்கரைப் பற்றியும் படித்தது போல, தமிழர் வரலாற்றையும் சற்றே படியுங்களேன். இந்த இனத்தின் மீது சற்று இறக்கம் கொள்ளுங்கள். தமிழ்த் தேசியம் பிறந்தே தீரும். ஈழமக்களின் படுகொலையே அதற்கொரு உத்வேகமாக அமையும். மொழிக்கொரு தேசம் இன்றியமையாதது. ஞாயமானது. அதை எவன் மறுக்கிறானோ அவன் ஒரு அயோக்கியன்.
11 01 2009
vijaygopalswami
மருத்துவர் அல்லது முனைவர் பாண்டியன் அவர்களே, அறிவார்ந்த உங்கள் பின்னூட்டுக்கள் பலவற்றையும் பல்வேறு தளங்களில் கண்டுள்ளேன். நீங்களா இப்படி எழுதுவது என்று இங்கே கண்டுள்ள பின்னூட்டம் நினைக்க வைக்கிறது. வந்தேறிகளால் தமிழன் பட்டது போதும் என்கிறீர்கள். திரைகடலோடித் திரவியம் தேடிய இனம் தமிழினம். அப்படிப் பார்த்தால் பெரும்பங்குத் தமிழினத்தை சென்றேறி என்று சொல்லிவிடலாமா? நாடு விட்டு நாடு, அல்லது மாநிலம் விட்டு மாநிலம் சென்று பொருளீட்டுவது அவரவர் விருப்பம் சார்ந்தது. தமிழன் சென்று பிழைக்கின்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் நீங்கள் சொல்கிறவாறு நினைத்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். தமிழ் மாநிலத்துக்கு வெளியே தமிழுணர்வுடன் வாழ்கிறவன் என்ற உரிமையில்தான் இதை எழுதுகிறேன். நன்றியுடன், விஜய்கோபால்சாமி
11 01 2009
Dr. V. Pandian
திரு. விஜயகோபால்சாமி அவர்களே! நான் ச்ற்று உணர்ச்சிவசப்பட்டுத்தான் எழுதினேன். எழுதியவிதம் எனக்கே சற்று சங்கடமாக இருந்தாலும் எழுதியதில் தவறில்லை என்றே கருதுகின்றேன். தமிழனும் சென்றேறிதான். நிச்சயமாக. ஆனால், அவன் எங்காவது அங்குள்ள மக்களின் உரிமைகளில் தலையிட்டுள்ளான் என்று உங்களால் கூற இயலுமா? அதானய்யா தமிழன். ஆனால், இங்கு வந்தேறி இளங்கோவன் சுப. தயிழ்ச்செல்வனின் இறங்கல் பதாகையைக் கிழிக்கிறான். சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழிக்காடு மொழியாகக் கூடாது என்கிறான். தங்கபாலு என்ற தெலுங்கன்,தமிழன் தனது ஈழ ரத்த சொந்தங்களுக்கு குரல் கொடுத்தால், சிறை படுத்தச் சொல்கிறான். அதுவும் நடக்கிறது. மணியரசன், சீமான் மற்றும் கொளத்தூர் மணி இப்போது சிறையில்! டிராபிக் ராமசாமி என்ற தெலுங்கு நாய், தமிழ்ப்புத்தாண்டை தையில் மாற்றுவதை எதிர்த்து, நீதி மன்றம் செல்கிறது. இவனுக்கு தமிழனை எதிர்ப்பதே தொழிலாகிவிட்டது. எனது கல்லூரி நன்பன். 30 வருட அண்ணன் தம்பி உறவு. அவனது வீட்டு நிகழ்வுகளுக்கு எனது அண்ணன் தம்பிகளும் சென்று கலந்து கொள்வார்கள். நான் வெளி மாநிலத்தில் கல்வி கற்க சென்ற போதும், எனது குடும்பத்தாரோடு அவனது நட்பு தொடர்ந்திருந்தது. அவன் தெலுங்கன் என்றாலும் அவனை தமிழனாகவே, வெகு இயல்பாகவே பாவித்தோம். தமிழ் செம்மொழியான பொழுதில் அவனை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டபோது, இயல்பாக தமிழுக்கான செவ்வியல் தகுதி பற்றிப் பேச எத்தனித்தேன். அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேச்சை மாற்றினான். நான் முதன் முறையாக அதிர்ந்துபோனேன். அப்போது தான் அவன் ஒரு தெலுங்கன் என்று, 30 வருடங்களுக்கப்புறம், முதன் முறையாக எனக்குப் பட்டது. நான் ஒன்றும் சொல்லவில்லை. சமீபத்தில் அவனை நான் சந்தித்தேன். மீண்டும் ஒரு அதிர்ச்சி. நாத்திகனான அவன் கருத்த நெற்றியில் பளபளக்கும் நாமம். புரிகிறதா அதன் அர்த்தத்தை! அவன் மீதிருந்த கொஞ்சநஞ்ச மறியாதையும் போய்விட்டது. விஜயகோபால்சாமி அவர்களே! தமிழன் மீது மாற்று இனத்தவருக்கு காழ்ப்பு இருக்கிறதையா! இது எதார்த்தம். ஆனால், தெலுங்கனோ, கன்னடனோ, மளையாளியோ அடிப்படையில் தமிழர்களே! தமிழ்ப் பாரம்பர்யத்தில் அவர்களுக்கு பங்குண்டு. தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாய் வாழும் இவர்களாவது இதை உணரவேண்டாமா? சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் தெலுங்கு ஏது, கன்னடம் ஏது, மளையாளம் ஏது? எல்லாம் தமிழ் தானே. இவற்றை இயற்றியதில் அந்த பகுதி மக்களின் பங்கும் இருந்திருக்குமல்லவா? தமிழ் உலகின் மூத்த மொழி. 1400 ஆண்டுகளே ஆன இம்மொழிகள் இவர்களின் அடையாளமா, இல்லை ஐம்பதினாயிறம் ஆண்டு பழமையுள்ள இவர்களின் பாட்டி மொழியான தமிழ் இவர்களின் அடையாளமா? தமிழகத்தில் வாழும் இவர்களாவது இதை உணர வேண்டாமா? எங்கிருந்தோ வந்த பெஸ்கி தனது பெயரைக்கூட முதலில் ‘தைரியநாதன்’ என்று மாற்றி பிறகு அது வட சொல் என்றறிந்தபின் ‘வீரமாமுனிவர்’ என்று தூயதமிழ்ச் சொல்லால் அழைத்தானே! அப்பேர்பட்ட மொழியையா தமிழ். இவர்கள் தமது பாட்டி மொழியை நேசிக்க வேண்டாமா? நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, தூற்றாமலிருக்க வேண்டாமா? இறுதியாக, தமிழைக் காதலிக்கும் எவரையும் எனது உடன்பிறப்பாகவே கருதுகிறேன். எல்லா தமிழரும் அப்படித்தான் கருதுவார்கள் என்பது திண்ணம். இந்த தன்னிலை வளக்கத்திற்கு காரணமாயிருந்த உங்களுக்கு எனது நன்றிகள் பல.
12 01 2009
Dr. V. Pandian
இன்னும் ஒரு சிலவற்றை எழுதிவிடுகின்றேன், விஜய்கோபால்சாமி அவர்களே! அம்பேத்கர் கடுமையாக பார்ப்பனீயத்தை எதிர்த்தவர். இந்திய மொழிகள் எல்லாமே, தமிழைத் தவிர, சமஸ்கிருதம் கலந்துள்ளதால் தமிழை மட்டுமே அவர் நேசித்தார். தமிழைக்கற்றவும் முயற்சித்தார். மராட்டியத்தைவிட தமிழின் மீது அவருக்கு மரியாதை இருந்தது. கன்னடம், தெலுங்கு மற்றும் மளையாளத்தை திட்டமிட்டே உருவாக்கியவர்கள் பிராமனர்கள் தான். வந்தேறிகளான அவர்கள் இந்த மன்னின் மொழி, அடையாளங்கள், வரலாறு போன்றவற்றை அழிப்பதிலே குறியாயிருந்தனர். தமிழை சிதைத்துத் தான் இந்த மொழிகளை உருவாக்கினார்கள். இம்மொழிகளின் முதல் இலக்கண நூல்கள் கூட வடமொழியில் தான் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘திராவிடச்சான்று’ என்ற நூலில் தாமஸ் ட்ரவுட்மன் என்ற அமெரிக்க ஆய்வாளர், தெலுங்குக்கு ஒரு செட்டியார் இலக்கணம் எழுதியதைப் பொருத்துக்கொள்ளாத தெலுங்கு பார்ப்பனர்கள் அந்த செட்டியாரின் வீட்டை இரண்டு முறை இடித்துள்ளனர் என்ற வரலாற்று நிகழ்வை சொல்கிறார். ஆக, கன்னடம், தெலுங்கு மற்றும் மளையாளம் எல்லாம் பார்ப்பனர்களின் மொழி. இதைக் கொண்டாடுவதில், திராவிட கன்னடனுக்கோ, தெலுங்கனுக்கோ அல்லது மளையாளிக்கோ என்ன பெருமை இருக்கப்போகிறது. தன்னை இழிவு படுத்திய பார்ப்பன மொழியான மராட்டியத்தை விட தமிழை நேசித்த அம்பேத்கரைப் போல, தமிழ் நாட்டில் வாழும் இம்மொழி மக்கள் தங்களது பாட்டி மொழியைக் கொண்டாட வேண்டாமா? நான் அதிகமாக கேட்கவில்லை ஐய்யா, தமிழனைத் தூற்றாதீர் என்று தான் இவர்களைக் கேட்கின்றேன். நான் மொழி வெறியன் அல்ல. ஆனால், உலக மொழி எல்லாம் அழிந்தாலும், தமிழ் வாழவேண்டும். ஏனென்றால் இந்த மொழி உலக மாந்தனின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தை பச்சைத் தமிழன் ஆண்டது வெறும் 8 ஆண்டுகள் தான் (அண்ணாவும், காமராசரும்). மற்ற 53 ஆண்டுகளும் தமிழனை வந்தேறிகள் தானய்யா ஆளுகின்றனர். தமிழனின் சகிப்புத் தன்மைக்கு இது ஒரு வரலாற்றுச் சான்றல்லவா? வந்தேறி கருனாநிதியின் துரோகம் எப்படிப் பட்டது என்று தெரிந்துள்ளதா? தமிழ், தமிழ் என்று தமிழைக் கெடுப்பவர் இவரே! கலைஞர் தொலைக் காட்சியைப் பார்த்தாலே புரியாதா? இவரது ஆட்சியில் தமிழன் நாசமாய்ப் போனது தான் மிச்சம். ஜெயலலிதா என்ற வந்தேறியின் ஆட்சியில் தமிழரெல்லாம் ‘பொடா’ சிறையில்! பக்தவச்சலம் என்ற வந்தேறியின் ஆட்சியில் இந்தியைத் திணிக்க தமிழர் மீது துப்பாக்கிச்சூடு! நூற்றுக்கணக்கானோர் உயிரழப்பு! இப்போது கொள்கை, கோட்பாடு, அறிவு, ஆளுமை எதுவுமே இல்லாத விஜயகாந்த் என்ற தெலுங்கு குடிகாரன் தயாராகிறான். இன்னமும் தமிழனுக்கு சகிப்புத் தன்மை வேண்டுமா? உலகிலேயே சிறந்த இனம் தமிழினம் தான். இந்த மூத்தக் குடியின் இலக்கியத் தாக்கத்தால் உண்டான மன முதிர்ச்சி! அவனிடம் பரிவு கொள்ளுங்கள் என்று தான் விண்ணப்பிக்கின்றோம்.
12 01 2009
Dr. V. Pandian
ராஜகோபாலாச்சாரி என்ற வந்தேறிப் பார்ப்பனர் 6000 கிராமப்புர பள்ளிக்கூடங்களை மூடினார். மனு தர்மத்தைக் காக்க! இதையெல்லாம் வைத்துத்தான் வந்தேறிகளால் நாங்கள் பட்டதெல்லாம் போதும் என்று எழுதினேன். தமிழ்த்தேசம் பிறந்தால், இங்குள்ள அனைவரும், பார்ப்பனர்கள் உட்பட, அவர்களுக்குரிய சம உரிமைகளோடு அமைதியோடும், அன்போடும், பாசத்தோடும் வாழக்கூடிய தேசமாகத் தான் இருக்கும். இதில் யாருக்கும் ஐயப்பாடு வேண்டாம். தமிழன் என்றுமே தமிழன் தான். என்னுடைய அசைக்கமுடியாத, பட்டறிவால் பெற்ற, ஞாணம் என்ன தெரியுமா? எந்த சூழ்நிலையிலும் நல்லவனாகவே இருந்தால் நீ அழிக்கப்படுவாய். நல்லவனுக்கு நல்லவனாய் இரு! எதிரிக்கு எதிரியாய் இரு! வாழ்வியல் எதார்த்தம் அது தான். தற்காப்பு எதார்த்தம்!
12 01 2009
ந.செந்தில்
நண்பர் பாண்டியன் அவர்களே “ஒருவர் யாராக இருந்தாலும் அவர் தமிழ் மொழிப்பற்றுடையவராக இருந்தால் நான் அவருக்கு அடிமையே ஆவேன் என்றார் தந்தை பெரியார். அதே போல் உங்கள் மொழிப்பற்றை நான் மதிக்கிறேன். உங்கள் எழுத்துகளை பல இடங்களில் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்போது நான் சொல்ல வருவது என்னவென்றால்,தமிழர்களாகிய நாம் இப்போது தான் ஓரணியில் ஒன்று திரண்டிருக்கிறோம். எனவே நமக்குள் பிரிவினை வேண்டாம். கருத்துகளை ஆரோக்கியத்துடன் பகிர்ந்து கொள்வோம். தொடர்ந்து உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். -நட்புடன் ந.செந்தில்
12 01 2009
Dr. V. Pandian
உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் செந்தில்! செவ்வியல் மொழியான தமிழை தமிழனுக்கானதாக மட்டும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை. இந்த வரலாற்றுப் பெட்டகம் அனைவருக்குமானது. அனைத்து உலக மொழிகளின் மூலம் இது. நாவாய் -> Naval Force பின்னு -> ஸ்பின்னு -> Spinning பஞ்சு -> ஸ்பஞ்சு -> Sponge பேச்சு -> ஸ்பேச்சு -> Speach மூலக்கூறு -> Molecule உரையாற்று -> Orate ஆங்கிலத்திற்கான சில சான்றுகளை மட்டும் கொடுத்துள்ளேன். சான்றுகள் ஏறாளம்.
12 01 2009
jp
டாக்டர் பாண்டியன் அவர்களின் வாதத்தில் உள்ள கருத்துக்களின் மூலம் சில புதிய தகலவல்களை தெரிந்து கொண்டேன் . அவருக்கு மிக்க நன்றி. அவர்களின் கேள்விக்கு மதியுன் பதிலுக்காக காத்திருக்கிறேன் //ஆம் தோழர் நான் ஒரு மாததற்கு முன் கீற்று என்ற இனையதளத்தில் உங்கள் கேள்வி-பதில் வருகிறது என்று ஆசிரியர் பக்கத்தில் அறிமுகம் பார்த்தேன் பிறகு உங்கள் கேள்வி-பதிலும் வரவில்லை அந்த அறிவிப்பையையும் காணவில்லை.// உண்மையிலேயா ?? தயவு செய்து உறுதி படுத்தவும்
13 01 2009
Dr. V. Pandian
மேலும் சில….. ஜப்பானியர்கள் தந்தையை ஐயா என்கின்றனர். வச்சிரபோதி என்ற காஞ்சி முனிவரின் உதவியால் ஜப்பானிய எழுத்துவடிவம் தமிழின் அடிப்படையில் செம்மைப் படுத்தப்பட்டது. கொரியர்கள் தாயை அம்மா என்று அழைக்கின்றனர். ‘தாய்லாந்தில்’ உள்ள தாய் அன்னைதான். மலேசிய கோலாலம்பூர் தமிழ்ப்பெயர் தான். சிங்கப்பூரும் அப்படியே! பர்மா, இந்தோநேசியா போன்ற பல நாடுகளில் பல ஊர்களின் பெயர்கள் மருவிய தமிழ்ப் பெயர்களே! பரதவர் (மீனவர்) -> பரத்தர் -> பிரத்தர் -> Brittons மூத்தக் குடியான தமிழன் தான் பல தொழில் நுட்பங்களை உலகுக்கு அளித்தவன். ஆரியர்களின் கடவுள் சுரண்டலால், அவர்கள் தங்களது பிழைப்பிற்காக நம்மிள் விதைத்த பிற்போக்குத் தனங்களால், தான் நாம் வீழ்ந்தோம், நம்மிடம் கற்ற கிரேக்கம் வளர்ந்தது. கட்டிடக் கலைக்கு உலகின் முன்னோடி தமிழன். அரசர்களின் கல் தச்சர்கள் தான் கோயல்களைக் கட்டினார்கள். அதிசயிக்க வைக்கும் கோயில்கள். அரசுத் தச்சன் -> ஆர்சி தெக்கான் -> Architect உலோகத் தொழில் நுட்பம் தமிழரால் உருவாக்கப்பட்டது. தாதுப் பொருட்களிடமிருந்து உலோகத்தை பிரித்தெடுக்கும் முறைக்கு ஆதிப்பெயர் கம்மியம் என்பது. கம்மியம் -> கெம்மியஸ் -> Chemistry இடுகாடு என்பது தமிழரின் ஊர்ப்புறத்தில் உள்ளது. ஊர்ப் புற மேடு -> புறமேடு -> பிரமீடு பிரமீட்டைக் கட்டிய தச்சர்கள் தமிழ் நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட கல் தச்சர்கள் என்ற வரலாற்று ஆதாரம் இருப்பதாக சொல்கிறார்கள். கால்டுவெல் தான் கிரேக்கத்தின் அருசா வும், ஆங்கிலத்தின் Rice ம் தமிழின் அரிசியிலிருந்து பிறந்த சொற்கள் என்று சொன்னவர். தமிழின் தொன்மை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கத்தான் சில எடுத்துக்காட்டுகளை உங்கள் முன் வைத்துள்ளேன்.
13 01 2009
க.அருணபாரதி
திரு பாண்டியன் அவர்களே… விசயகாந்தையும் கருணாநிதியையும் வந்தேறிகளாக நாம் வரையறுக்கத் தேவையில்லை. 1956 மொழிவழி மாநிலப் பிரிவிற்கு பின்னர் தமிழகத்தில் குடியேறிய மலையாளி, தெலுங்கர், மார்வாடிகள, குசராத்திகளைத்தான் வந்தேறிகளாக கணக்கில் கொள்ள வேண்டும். அவர்கள் இங்கு வாழ்வதோடு அல்லாமல் தமிழர்களின் தொழில் வணிகங்களின் ஆதிக்கத்தைத் தான் நாம் எதிர்க்கிறோம். தமிழ்த் தேசியவாதிகள் அம்பேத்கரை வெறுப்பவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கபடுவதை பலமுறை நான் கண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் அப்படி கிடையாது. தமிழர்களை பிளவுபடுத்திய பார்ப்பனியத்தை தான் நாம் சாட வேண்டுமே தவிர தமிழர்களை சாதி வேற்றுமைகள் பாராது ஒன்றுபடுத்தும் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பது தீர்வாகாது. பெண் விடுதலையை போல தலித் விடுதலை என்பது தமிழ்த் தேசிய விடுதலையின் ஒரு முக்கியமான கூறு என்பதை யாரும் மறுக்கவில்லை. தமிழர்களாகிய நாம் நம்மை நாமே சீர்திருத்தததிற்கு உட்படுத்தியே தலித் விடுதலையை நாம் சாதிக்க இயலும். நாம் நமக்குள்ளேயே பிளவுபட்டால் பார்ப்பனியத்தின் வெற்றியை நாமே ஏற்றுக் கொள்வது போலாகிவிடும். தோழமையுடன், க.அருணபாரதி

முல்லா கதைகள்முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , அப்போது நாளிதழில் வந்த ஒரு( கிழ்கண்ட ) விளம்பரம் அவரை கவர்ந்தது

“ மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!
1.) சாதா உடற் இளைப்பு –ரூ 1,000/- ஒரு மணி நேரம் ( 2 - 5 கிலோ வரை)
2.). சூப்பர் ட்ரிம்மர் - ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை)
3.) ஹெவி ட்ரிம்மர் - ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 – 15 கிலோ வரை )
4.) அல்டிமேட் ட்ரிம்மர் - ரூ 10,000/- கால வரம்பு இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள் “

முல்லா அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார் , 

ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் சோதிக்க விரும்பி அதற்குரிய பணத்தைச் செலுத்தினார். 

அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார் அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் ,

அவருடைய கையில் ஒரு அட்டை அதில் “ ஒரு மணி நேரத்திர்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம் “ என்று எழுதியிருந்தது , முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார் – 

அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது – 

அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கணிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை சோதிக்க விரும்பினார் இந்த முறையில் வித்யாசம் அறையின் அளவு 40x40, சாதா முறையைவிட நல்ல அழகான பெண் , கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான் ,இங்கும் அவருக்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் வித்யாசம் அறையின் அளவு 75x75 , மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம் , முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார் 

அவருக்கு , எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் , கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார் ,

வரவேர்ப்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார் , 

அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும் அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது , 

முல்லாவிற்க்கு வேறு வழியும் இல்லை , தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாரே உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். 

அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும் ,

 அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, 

முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே ஒரு பெரிய மனிதக்குரங்கு,“    நான்  உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் “ என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக அமர்ந்திருந்தது. 
நன்றி - 
நண்பர் சாரி அவர்கள்

Tuesday, March 20, 2012

”திறன் அறிவு”

தமிழ்நாட்டில் இராசிபுரம் காவல் நிலையத்தில் ஒரு வேலை செய்திருக் கிறார்கள்.


தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலைப் பிடித்து விட்டார்களாம். இதைச் செய்வதற்குத் தானே காவல்துறை இருக்கிறது.

அப்படியெல்லாம் அவர்கள்மீது இல்லாத திறமையைப் புகுத்தக் கூடாது. அவர்களது அது போன்ற நம்பிக்கையெல் லாம் அறவே கிடையாது.

அதனால் என்ன செய் தார்கள் கொள்ளையர்கள்? பிடிபட்டதற்காக நேர்த்திக் கடன் என்ற பெயரில் கிடா வெட்டிப் பூஜை செய் திருக்கிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால் காக்கி உடை களைக் கழற்றி எறிந்து விட்டு காஷாயம் தரித்துக் கொண்டால் ஆச்சாரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

------------ மயிலாடன் அவர்கள் 16-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி? | பொன்மலர் பக்கம்

தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி? | பொன்மலர் பக்கம்

Thursday, March 8, 2012

"துருப்பிடித்த மனதைத் துலக்கு வெற்றி மட்டுமே இலக்கு"

நதியைக் கவனித்திருக்கிறீர் களா? சமதளத்தில் மென்மையாக ஓடிக் கொண்டிருக்கும். பாறைகளின் இடையே ஓடும் போது சலசலவென தாவி ஓடும். அருவியில் வருகையில் உடைந்து வீழும். ஆனால் விழுந்த இடத்திலேயே காலொடிந்து கிடப்பதில்லை. ஆக்ரோஷம் கூட்டி இன்னும் அதிக வேகமாய் ஓடும்.

*தடைகள் இல்லாத பயணமே கிடையாது. தடைகளைத் தாண்டி ஓட வேண்டும். ஐயையோ தடை வந்துவிட்டதே என உடைந்து போய் உட்கார்ந்தால் வெற்றி கிடைக்காது. தடைகள் வரும்போது, வேகம் குறையலாம், அல்லது தாமதம் நேரலாம். ஆனால் முறியடித்து முன்னேறுவதில் தான் சாதனைகள் அடங்கியிருக்கின்றன.

இன்றைய இளைஞர்களின் முன்னே நிற்கும் முக்கியமான சிக்கல்களாக இவற்றைச் சொல்லலாம்.

போதை: இன்று, நேற்றல்ல, எப்போதுமே ஓர் இளைஞனின் வெற்றியை வெட்டிப் போட போதைப் பழக்கம் மட்டுமே போதும். நிகோடினை நுரையீரலுக்கு நேரடியாய் இறக்கி வைக்கும் புகை அதில் முக்கியமான ஒன்று. பள்ளிக்கூடப் படி தாண்டும் முன்பே பலருக்கும் புகை பழகிவிடுகிறது.

உலகில் எங்கே என்ன தடை செய்யப்பட்டாலும் அது நம்ம ஊரில் கிடைக்கிறது. இன்றைக்கு இளைஞர்களுக்கு போதை வஸ்துகள் எப்படி கிடைக்கின்றன என இங்கிலாந்தில் ஓர் ஆய்வு நடத்தினார்கள். `நெட்ல எல்லா மேட்டரும் இருக்கு' என 64 சதவீதம் இளைஞர்கள் பதில் சொன்னார்கள்.

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை மிரள வைக்கிறதா இல்லையா? போதைப் பொருட்களால் உடலுக்கு தீமை என 91 சதவீதம் இளைஞர்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் அதை விட்டு விலகுவதில்லை.

புற்றுநோய், மன அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு என வரிசையாய் அத்தனை நோய்களையும் தந்து செல்லும் போதையைத் தாண்டுவது இளைஞர்கள் செய்ய வேண்டிய முதல் தடை தாண்டல்.

இணைய அடிமைத்தனம்: உங்களுக்கு ஓர் அடிமை இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்வான். மாடியிலிருந்து குதிக்கச் சொன்னால் கூட குதிப்பான். எஜமானனை மீறி அவன் எதுவும் செய்ய மாட்டான். அவனுக்கு எல்லாமே எஜமானன்தான்.

இப்போது இணைய அடிமைத்தனத்துக்கு வருவோம். சிலருக்கு எல்லாமே இணையம்தான். குறிப்பாக இணையத்தில் பாலியல் சார்ந்த கிளர்ச்சிகளைத் தேடி அலையும் இளைஞர்கள் அந்த வலைக்கு முழு அடிமையாகி விடுகிறார்கள். போதைக்கு அடிமையாவது போல இணையத்துக்கு அடிமையாவதும் ஒரு மிகப்பெரிய பலவீனமே.

இணைய அடிமைகள் அடிமையாகும் இடங்கள் என்னென்ன தெரியுமா? பாலியல், விளையாட்டு, சமூக வலைத்தளம், வலைப்பூக்கள், மின்னஞ்சல், சேட்டிங், ஷாப்பிங் இவையெல்லாம்தான்.

மருத்துவம் இதை இன்டர்நெட் அடிக்ஷன் டிஸார்டர் (IAD) என்கிறது. இணையம் எனும் அற்புதமான ஊடகம் சரியாகப் பயன்படுத்தினால் பாற்கடல். அதற்கு அடிமையாகி விட்டாலோ அதுவே விஷமாக மாறிவிடும் நச்சுக்கடல்.

இளைஞர்கள் இன்றைக்குத் தாண்ட வேண்டிய இன்னொரு தடை இந்த இணைய அடிமைத்தனம்.

வன்முறை சிந்தனை: வீரத்தையும், சண்டித்தனத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் இளைஞர்களிடம் தேவையற்ற வன்முறை சிந்தனை மேலோங்கி இருக்கிறது.

ஒரு காலத்தில் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மட்டும்தான் பள்ளி, கல்லூரிகளில் வன்முறை வெறியாட்டம் நடக்கும். இன்று நமது தெருக்களிலும் நடக்கின்றன. அமெரிக்காவில் கல்வி நிலையங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் மட்டும் 147. மொத்த சாவு எண்ணிக்கை 359 என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஆசிரியையை கத்தியால் குத்திக் கொல்கிறான் மாணவன், ஆசிரியர் அடித்ததால் மாணவனுடைய கை செயலிழந்து விட்டதாய் வேளச்சேரி வீதிப் போராட்டம் நடத்து கிறது. ஆசிரியர் அடித்ததால் மாணவனின் காது கேட்கவில்லை என இன்னோர் மாநிலத்தில் குரல் எழுகிறது.

சமீபத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் செய்த நிகழ்வு நெகிழ வைத்தது. 50 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் ஆசிரியர்களையெல்லாம் வரிசையாய் நிற்க வைத்து அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்கள். பழைய ஆசிரியர் -மாணவர் உறவு இப்படி இருந்தது. ஆசிரியர்களிடம் மாணவர்களை பெற்றோர் முழுமையாய் ஒப்படைத்தார்கள். ஆசிரியர்களை தெய்வங்களாய் மதிக்குமளவுக்கு அவர்களுடைய வழிகாட்டல் இருந்தது.

இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஆசிரியர்களை பாடங்கள் சொல்லித் தரும் பணியாளர்களாய்தான் பெற்றோர் பார்க்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்களும் இதை மாத ஊதியம் தரும் ஒரு வேலையாகத்தான் பார்க்கிறார்கள். மாணவர்களின் மனதில் வன்முறை எண்ணங்கள் பெருக நல்வழிப்படுத்தாத ஆசிரியர்கள் ஒரு காரணம். ஆசிரியர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்காத பெற்றோர் இன்னொரு காரணம்.

போதாக்குறைக்கு தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் போன்றவை வன்முறையையும், அதன் நுணுக்கங்களையும் சொல்லித் தந்து விடுகின்றன. தார்மீகக் கோபம் கொண்டு சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட வேண்டியது இளைஞனின் பணி. மற்றபடி தேவையற்ற வன்முறை சிந்தனை இளைஞர்கள் தாண்ட வேண்டிய இன்னொரு தடை.

உடல் நலம் பேணாமை: மேலைநாட்டு பிரச்சினையாய் இருந்த 'ஒபிசிடி' எனும் அதிக உடல் பருமன் இன்றைக்கு வீட்டுக்கு வீடு. காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை.

பழைய வாழ்க்கை இளைஞர்களை நடக்க வைத்தது. அவர்கள் உடல் உழைப்பை செலுத்தினார்கள். ஓய்வு நேரத்தில் நீச்சலடித்தார்கள், ஓடியாடி விளையாடினார்கள். உடல் கட்டுக்கோப்பாய் இருந்தது.

இன்றைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கே காரோ, பைக்கோ தேவைப்படுகிறது. முதலாவது மாடிக்கு மூச்சிரைக்காமல் போக லிப்ட் தேவைப்படுகிறது. ஓய்வு நேரத்தில் ஆடாமல் அசையாமல் தொலைக்காட்சி, இன்னும் நேரம் கிடைத்தால் வீடியோ கேம் அல்லது இன்டர்நெட்.

இப்படி, உடலானது பராமரிப்பில்லாத ஒரு கூடாரம் போல சிதிலமடைந்து கிடக்கிறது. பல இளைஞர்கள் பெயரளவில் இளைஞர்கள், உடலளவில் முதியவர்கள் என்பது தான் உண்மை. இளைஞர்கள் தாண்ட வேண்டிய இன்னொரு தடை இது.

நாகரீகமின்மை: மருத்துவமனை வாசலில் டாக்டருக்காய் கவலையுடன் காத்திருக்கும் இடைவெளியில் ஒலிக்கிறது ஓர் இளைஞனின் தொலைபேசி. 'ஒய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறிடி..'. மருத்துவமனையில் பல்வேறு கவலைகளுடனும், துயரங்களுடனும் காத்திருக்கும் மக்களுக்கு எரிச்சலை உருவாக்குகிறது அது. இளைஞனோ எதையும் கண்டுகொள்ளவில்லை, ஆமை வேகத்தில் தொலைபேசுகிறான்.

மருத்துவமனை, நூலகம், தொழுகைக் கூடங்கள் இவற்றிலெல்லாம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்பது அடிப்படை நாகரீகம்.

பொது இடத்தில் அமைதியைக் கடைபிடிப்பது, பண்புடன் நடந்து கொள்வது, பெரியவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது, சமூகக் கடமையோடு இருப்பது என இளைஞர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

'இந்தக் காலத்துப் பசங்க நாகரீகம் இல்லாதவங்க...' எனும் குற்றச்சாட்டைத் தாண்ட ஒரு கட்டாயத் தாவல் அவசியம்.

தவறான முன்னுதாரணங்கள்: `ஒரு முன்னுதாரணத்தைப் போல நம்மைப் பாதிப்பது எதுவும் இல்லை' என்கிறார் பிரெஞ்சு மேதை பிரான்காயிஸ்.

பண்டைய காலத்தில் குருகுலத்தில் குருவை முன்னுதாரணமாய்க் கொண்டு அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார்கள் நமது தமிழ் இளைஞர்கள். இன்றைக்கு அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் திரை வசீகரங்களோ, விளையாட்டு வீரர்களோ, பணக்கார தலைவர்களோதான்.

அதிலென்ன தப்பு என்று கேட்பவர்கள் உண்டு. வெற்றியாளர்களின் வாழ்க்கையை அலசி, நல்ல அம்சங்களை எடுத்தால் பாராட்டலாம். ஆனால் பெரும்பாலும் நாம் அவர்களுடைய புகழ் பாடும் சுவரொட்டிகளாக மாறி விடுகிறோம்.

ஒரு நல்ல முன்னுதாரணத்தையும், ஒரு நல்ல வழிகாட்டியையும் கொண்டிருப்பது வெற்றிக் கதவை தொட்டுத் திறக்க அவசியத் தேவை.

தவறான முன்னுதாரணங்களைத் தாண்டி ஓட வேண்டியது இளைஞர்கள் செய்ய வேண்டிய அடுத்த தாவல்.

உறவுச் சிக்கல்கள்: 'பிரண்ட் என் கூட பேச மாட்டேங்கறா... நான் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று எழுதி வைத்து விட்டு பதின் வயது மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள். `விடுதியில் மாணவர்கள் கிண்டலடிக்கிறார்கள்' என்று சொல்லி விடுதி மாணவன் தூக்கில் தொங்குகிறான். காதலி மறுத்தாள் என அவள் வீட்டு முன்னால் உயிரை மாய்க் கிறான் காதலன்.

இளைஞர்கள் உறவு ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்களோ என அச்சமாக இருக்கிறது. தனது சாவின் மூலம் இன்னொருவருக்குப் பாடம் புகட்ட நினைக்கும் தவறான மனநிலை இது. நண்பனுக்கு இன்னோர் நண்பன் கிடைப்பான், தோழிக்கு இன்னோர் தோழி, காதலிக்கு இன்னோர் காதலன். இழப்பு என்னவோ இறந்தவனுக்கு மட்டுமே. இதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று விஷயங்கள் முக்கியத் தேவை. விமர்சனங்களில் உடைந்து போய்விடாத மனம். அடுத்தவர்களோடு ஒப்பிட்டு தாழ்வு கொள்ளாத மனம். இணைந்து வாழும் ஆனந்த மனம். அவ்வளவுதான். இணைந்து வாழும் இளைஞர்கள் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறது உளவியல்.

உறவுச் சிக்கல்கள், இளைஞர்கள் தாண்டவேண்டிய இன்னொரு தடைக்கல்.

மனம் சார்ந்த சிக்கல்கள்: இளைஞர்களுடைய மன அழுத்தம் பெரும்பாலும் அடுத்தவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. முதல் மார்க் வாங்காவிட்டால் ஏதோ பெரிய பாவம் செய்தது போல பிள்ளைகளைப் பார்க்கும் பெற்றோர் உண்டு. விருப்பமில்லாத படிப்புக்காய் தலையணை புத்தகங்களுடன் மன அழுத்தத்தைச் சுமக்கும் மாணவர்கள் உண்டு.

போதாக்குறைக்கு சினிமா, விளம்பரங்கள், ஊடகங்கள் போன்றவையும் ஏகப்பட்ட நிர்ப்பந்தங்களை இடுகின்றன. `உங்கள் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும்', 'இந்த வீடுதான் வேண்டும், இந்த கார்தான் வேண்டும், இந்த சுற்றுலா வேண்டும்' என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லும் விதிமுறைகள் இளைஞர்களை மன அழுத்தத்தில் தள்ளுவதுண்டு.

தன்னை அறிந்து, தன் ஆழ்மன விருப்பத்துக்கேற்ற ஒரு லட்சியத்தை அமைத்துக் கொள்வதும், வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பாகங்கள் என புரிந்து கொள்வதுமே இளைஞர்களின் தேவை.

மன அழுத்தத்தையும் இளைஞர்கள் தாண்டிவிட்டால் அவர்கள் வெற்றியின் முற்றத்தை எட்டி விட்டார்கள் என்பதே பொருள்.

ஒரு வேண்டுகோள்

-- இன்று மதியம் திரு பாபு கருணாகர தாஸ் வேலூரில் இருந்து தொலை பேசியில் பேசினார்
இறைவன் அருளால் அவர் 75 % (கால் ) குணமடைந்து வருகிறார் என்றும் , அவருக்காக பிரார்த்தனை செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தார் ....

மேலும் நண்பர் திரு கருணாகர தாஸ் வெகு சீக்கிரம் நல்ல நிலைமை அடைய மீண்டும் பிரார்த்திப்போம்

படுத்த படுக்கையில் சில மாதங்கள இருக்கும் அவருக்கு மன பலம் கூட ஆறுதலாக நல்ல வார்த்தைகளை கூற வேண்டுகிறேன் அப்படி நேரில் செல்ல முடியாதவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கட்டாயம் ஆறுதல் கூறவும் ......

அவர் தொலை பேசி என் 94434 57778