Wednesday, August 1, 2012

மனிதன் தீவல்ல..

கவர்ச்சித் தத்துவங்களைத் தள்ளுபடி செய்யுங்கள்.

“ஒருபோதும் உன் உண்மைத்தன்மையை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ளாதே. நீ நீயாகவே இரு.”

-இப்படியொரு பொன்மொழியை ஒரு நண்பர் தனது நிலைத்தகவல் படமாகப் பதிவு செய்திருக்கிறார். இப்படி, மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பது போன்ற தத்துவங்கள் நிறையவே உலா வருகின்றன.

மற்றவர் நலனுக்காக நம்மை மாற்றிக்கொள்வதே உன்னதம். எனது ஒரிஜினாலிட்டி என்பது ஒரு மோசமான குணமாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம், அதை மாற்றிக்கொண்டாக வேண்டும் அல்லவா? அதற்கு மற்றவர்களைப் பார்த்துக் கறறுக் கொள்வது அவசியம் அல்லவா? உலகில் யாரும் எவரையும் சார்ந்திராதவர்கள் அல்ல. மற்றவர்களிடமிருந்து நாம் நிறையப் பெறுகிறோம். நமது அறிவு உள்பட மற்றவர்களிடமிருந்து (சமுதாயத்திடமிருந்து) கிடைத்த அனுபவத் தொகுப்புதான்.

ஆகவே நீ நீயாகவே இரு என்ற தனி மனிதரைத் தனித் தீவாக ஒதுக்குகிற கவர்ச்சித் தத்துவங்களைத் தள்ளுபடி செய்யுங்கள்.

நன்றி- Kumaresan Asak

No comments:

Post a Comment