Tuesday, September 25, 2012

உடலில் புதைந்துள்ள‍ (அறியா) அரியத் தகவல்கள் -

மனித உடலில் புதைந்துள்ள‍

(அறியா) அரியத் தகவல்கள்இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று.மூளைக்குத் தேவையான பிராணவாயு –
உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு.
உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடது பக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணுலியூக் கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.ரெடினா என்பது விழித்திரை
ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறி குறி சுவை குறைந்து விடும்.
ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேரு மிடம்.
கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி

ப்ளூரா என்பது நுரையீரல் உறை
இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள் ளன.
அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.

உடலில் 206 எலும்புகள் உள்ளன.
பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகா லையும் இணைக்கும் எலும்பு
மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொ டை எலும்பு.
மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
முகத்தில் உள்ள எலும்புகள் 14.
கைகளில் உள்ள எலும்புகள் 27.
மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
மூளையில் பெரிய பகுதி பெருமூளை – செரிப்ரம் என்று அழைக்கப் படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபக ம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000கோடி இரத்த சிவப்பணுக் களை உருவாக்குகிறது.
மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.

இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
வெஸ்டிபுலே–எனப்படுவது பற்கள், கன்னத்திற்குஇடைப்பட்ட பகுதி.

சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கு ம் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியா கும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபி டெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என் றும் அழைக்கப்படுகிறது.

மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என் று அழைக்கப்படுகிறது.
ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.

மனிதஉடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3மில்லியன்களுக்குமேல் உள்ளன.
செரடோனின்–வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை
உறிஞ் சுதல்.
உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.
இணையத்தில் இருந்ததை இதமுடனே இணைக்கின்றோம்

Monday, September 17, 2012

நினைவாற்றல்
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;
1.
தன்னம்பிக்கை
2.
ஆர்வம்
3.
செயல் ஊக்கம்
4.
விழிப்புணர்வு
5.
புரிந்துகொள்ளல்
6.
உடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1.
தன்னம்பிக்கை (Self Confidence)

என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறதுஎன்ற நம்பிக்கை முதலில் வேண்டும். நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” – என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.
நினைவாற்றல்என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.
ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3.
செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.
உதாரணத்திற்கு ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?
தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4.
விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5.
புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6.
உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

மூளைச் சோர்வை தடுக்கும்

அன்றாடம் வீட்டு சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும்

அக்ரூட், திராட்சை

அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோல் வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளைக்கு சுறுசுறுப்பு

நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்தைகளும், பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பப்பாளிப் பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.

பசலைக்கீரை 

பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்

நெல்லிக்காய் 

மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும்.

நட்புடன் 
சாயிபாபா

தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய பகுத்தறிவுவாதியாகவில்லை! - Google Groups

தமிழ்ப் படித்தவனெல்லாம் சாமியானனே ஒழிய பகுத்தறிவுவாதியாகவில்லை! - Google Groups

Sunday, September 9, 2012

ஆவாரம் பூ

ஆவாரம் பூவு.....ஆறேழு நாளா ...... நீ போகும் பாதையில் பார்த்திருந்தேன்,இனிமையான தமிழ்ப்பாடல்.

ஆனால் நாம் போகும் பாதைகளில் கண்ணுக்கு குளிர்ச்சியாக மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூ ஆவாரம் பூ என்பதை எத்தனை பேர் அறிவோம்?

தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.

செடி முழுக்க மருத்துவப்பயன் உடையது. பூவை தண்ணீரில் காய்ச்சியோ அல்லது பாலில் கொதிக்க வைத்தோ சாப்பிட்டு வந்தால் உடல் நாற்றம் ,உடலில் உப்பு பூத்தல், நா வறட்சி ஆகியன நீங்கும்.

இதன் விதை சூரணம்,உடலுக்கு வலு கொடுக்கும்,காமம் தூண்டும். முழுச்செடியின் சூரணம் நீரிழிவு(சர்க்கரை நோய்) உடல் மெலிவு ,எரிச்சல் ,உடல் பலகீனம்,மயக்கம்,மூச்சுத்திணறல் ஆகியவற்றை போக்கும்.

இதன் பட்டையை பொடி செய்து வைத்துக்கொண்டு தண்ணீரில் இட்டு சுண்டக்காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் நீரிழிவு,சிறு நீர்க்கோளாறுகள்,தாக வறட்சி ஆகியவை தீரும்.

நாட்டு மருந்து கடைகளில் சீயக்காய் பொடி தயாரிக்க மூலிகைகள் வாங்கும்போது அதில் ஆவாரம் பூவும் இடம்பெறும்.அரைத்து தேய்த்து குளித்தபிறகு ஒரு புத்துணர்வு கிடைக்கும் பாருங்க அது எந்த சோப்பிலும் கிடைக்காது.

ஆவாரம் பூ பூத்துக் குலுங்கும் காலங்களில் என் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அப்படியே வண்டியை ஓரம் கட்டி பை நிறைய பறிச்சுடுவேன்.வீட்டில் சாம்பார்,காரக்குழம்பு எல்லாவற்றிலும் இந்த பூவை வதக்கி சேர்த்து விடுவார்கள்.

அதேபோல் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்வேன், தேநீர்,காஃபிக்கு கொஞ்சம் இடைவெளி கொடுக்க நினைக்கும் போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவேன்,சமயங்களில் பாலுடனும் சேர்த்துக்கொள்வேன்.வாசனை அருமையாக இருக்கும்,சுவையாகவும் கூட இருக்கும்.இதே போன்று தாமரை இதழ்களையும் பொடி செய்து பயன்படுத்துவதுண்டு.

எனக்கு புரியாத ஒரு விஷயம் இந்த ஆவாரம் பூ,தாமரை பொடியில் தயாரிக்கப்படும் தேநீர் நல்ல சுவையும்,மணமும் இருந்தும் தமிழர் வாழ்வில் இருந்து விலகிப்போனது ஏனோ? இத்தனைக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் அருமருந்து இது.

எனக்கு ஆவாரம் பூவின் நினைவு வந்து விட்டது, பறிக்க பையை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன், நீங்க?????????????????????????? ரெடியா????????